இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் வரவேற்கத்தக்கது!
இலங்கைக்கு GSP + வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு புளுP + வரிச்சலுகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
GSP + வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டு சுமார் ஒரு வருட காலத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அந்தக் குழுவின் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வரிச்சலுகையை இலங்கை மீளப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அமுலாக்குவதை தவறவிடக் கூடாது என்றும் அந்த குழு கூறியுள்ளது.
நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமானது.
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு நேற்றைய தினம் காலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது தவிசாளர் தெரிவின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிலிப் பற்றிக் ரொஷானை பிரேரித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரை பிரேரித்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்த பிலிப் பற்றிக் ரொஷான் 7 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரேரித்த நல்லதம்பி சசிக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
நெடுந்தீவு பிரதேச சபையானது 13 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 4 ஆசனங்களையும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் 06 ஆசனங்களையும் சுயேட்சை குழு 02 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழுவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply