கனடாவில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் 14 பேர் பலி – அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல்
கனடா நாட்டில் உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஜுனியர் அணி வீரர்கள் பேருந்தில் சென்றனர். சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் சென்றபோது எதிரே வந்த டிரக்குடன் மோதியது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், கனடாவில் நடந்த பேருந்து விபத்தில் சிக்கி ஐஸ் ஹாக்கி வீரர்கள் 14 பேர் பலியானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கனடாவில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் விபத்தில் சிக்கி பலியானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விபத்தில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply