ராஜித சேனாரத்ன இராணுவம் தொடர்பாக வெளியிட்ட கருத்திற்கு எதிராக கண்டனஆர்ப்பாட்டம்
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இராணுவம் தொடர்பாக வெளியிட்ட கருத்திற்கு எதிராக கண்டனஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலியிலுள்ள இராணுவர் நினைவுத்தூபிக்கு அருகிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் புலிகள் மாத்திரமல்ல பொதுமக்களும் கொல்லப்பட்டதாக ராஜித வெளியிட்ட கருத்தை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் உயிர்நீத்த இராணுவத்தினரின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் அவர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றும் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட.மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை துக்கதினமாக அறிவிப்புச் செய்தமை நியாயமானது என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சட்டத்தரணி பிரேம்நாத் சி.தொலவத்த தலைமையிலான குழுவினால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய சில கட்சிகளும் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குறித்த கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply