அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: சிரியா மறுப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது போன்று, உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சிரியாவின் அதிபர் ஆசாத்தும் அவரை சந்திப்பாரா என்று சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆசாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. அமெரிக்காவின் கொள்கைகள் ஒருபோதும் மாறாது. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும். என்ன பேச வேண்டும் என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்கும். இந்த அராஜகப் போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும்.
இவ்வாறு அதிபர் ஆசாத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply