அமெரிக்காவில் போதை மருந்துக்காக மகனை ரூ.1½ லட்சத்துக்கு விற்ற தாய்

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்பல்கிறிஸ்டி நகரை சேர்ந்த பெண் எஸ்மெரால்டாசார்ஜா (29). இவருக்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.இவர் தனது காதலருடன் இணைந்து போதை மருந்து பயன்படுத்தி வந்தார். ஒரு கால கட்டத்தில் போதை மருந்து வாங்கியவரிடம் பணம் செலுத்த முடியவில்லை. அதனால் போதை மருந்து கிடைக்கவில்லை.

போதை மருந்து கிடைக்காமல் தவித்த அவர் தனது 7 வயது மகனை நியூசெஸ் கவுண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்றார்.

இதுபற்றிய தகவல் தெரிந்ததும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். நியூசெஸ் கவுண்டியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த 7 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

போதை மருந்துக்காக பெற்ற மகனை விற்ற எஸ்மெரால்டாசார்ஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply