கேரளாவில் கனமழை பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. __

 

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா செல்ல உள்ளார். இன்று மாலை நடைபெற உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு அவர் கேரளா புறப்பட்டு செல்கிறார்.

 

இந்த பயணத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய மந்திரி அல்போன்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply