உருண்டு புரண்டு மூர்க்கத்தனமாக மோதிய பெண்கள்; ஒருவர் நிலை கவலைக்கிடம்
ஊவா மாகாணம் பதுளையில் இரண்டு பெண்களுக்கிடையே நடந்த கடும் தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரமாக கடும் வார்த்தைகளால் மோதிக்கொண்டிருந்த குறித்த இரண்டு பெண்களும் திடீரென கடுமையாக சண்டை செய்துள்ளனர். நிலத்தில் உருண்டு புரண்டு சண்டை செய்தபோதும் யாரும் சண்டையை விலக்க முன்வரவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கத்தி ஒன்றை எடுத்த பெண் மற்றப் பெண்ணை மோசமாக குத்திக் காயப்படுத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றப் பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கன்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையிலுள்ளவர் மீகஹகிவுல, அத்துருஎல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான திருமணமான பெண் என தெரிவிக்கப்பட்டதுடன் மோதலுக்கு காரணம் இருவருக்குமிடையில் இருந்த பணப்பிரச்சினை என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply