ட்ரம்ப் மற்றும் தெரேசா மே நியூயோர்க்கில் விசேட சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஆகியோர் நியூயோர்க்கில் இருதரப்பு சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.ஐக்கிய நாடுகள் பொதுசபை அமர்வுகளுக்கு மத்தியில், லொட்டே நியூயோர்க் பெலஸ் விருந்தகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பின்போது இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இராணுவ விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வௌியிட்ட அமெரிக்க ஜனாதிபதி, பிரதமர் மே முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன், இருதரப்பு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து கருத்து வௌியிட்ட மே, இரண்டு நாடுகளும் ‘சிறந்த நல்லுறவுகளை’ பகிர்ந்துகொண்டுள்ளதுடன், வொஷிங்டன் மற்றும் லண்டனுக்கு இடையில் பரந்தளவிலான வர்த்தக ஒப்பந்தங்களை பேரார்வத்துடன் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக அன்றைய தினம் இரு நாட்டுத் தலைவர்களும் ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply