வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று திடீர் சோதனை, மேலதிக அதிகாரிகள் வரவழைப்பு
சிறைச்சாலையில் கைதிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத உபகரணங்களைத் தேடி வெலிக்கடை சிறைச்சாலை, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை என்பவற்றில் இன்று (29) திடீர் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை அதிகாரிகள் 200 பேருக்கும் அதிகமானோர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த விசேட தேடுதல் நடவடிக்கைக்கு கொழும்புக்கு வெளியிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தேடுதல் நடவடிக்கை இதுவெனவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply