தமிழ் இனம் வன்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளது: ஸ்ரீதரன்
இன ரீதியான வன்முறைக்குள் தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீதரனின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிக்கீடு செய்து தனது கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.
ஸ்ரீதரனின் உரையின் போது குறுக்கிட்டு பேசிய நாமல் ராஜபக்ஷ, “மகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் விடுதலைக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். நேற்று முன்னாள் அமைச்சர் ஒருவர் அரை மணி நேரத்தில் பிணையை பெற்றுக் கொண்டார். கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது கைதிகளை விடுவித்து தருவதாக மக்களுக்கு கூறினீர்கள். இதுவரை என்ன செய்துள்ளீர்கள். அதனை அறிய ஆவலாய் உள்ளோம். வெறுமனே குற்றம் சுமத்துகின்றீர்கள் ஆனால் எதனையும் செய்யவில்லை” எனக் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply