ஸ்ரீ.சு.கவின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதியின் இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல்கள், கட்சியின் சம்மேளனம் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விலகுமாறு மஹிந்த அணி தொடர்ந்தும் கோரி வரும் நிலையில் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply