ஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஸவே தகுதியானவர் : வாசுதேவ நாணயக்கார

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஸவே தகுதியானவர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருக்கவேண்டும் என்பது தொடர்பில் இதுவரைக்கும் நான் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.

கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகளுக்கிடையில் வீண் பிரச்சினைகள், தர்க்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தாமல் வந்தேன்.

இருந்தபோதும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பந்துல குணவர்த்தன, ஜனாதிபதி வேட்பாளருக்கு மிகவும் பொருத்தமானவர் என தெரிவித்து ஒருவரின் பெயரை ஊடங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அதனால்தான் இதுவரை காலமும் நான் பகிரங்கப்படுத்தாமல் இருந்து வந்ததை வெளிப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

சமல் ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானர் என்பதை நாங்கள் தெரியப்படுத்த வேண்டியதல்லை. அது எல்லோரும் அறிந்தவிடயம்’ என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply