அர­சி­யல் கைதி­கள் விடு­விப்பை வலி­யு­றுத்தி ஐ.நாவுக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் மனு

தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்­கக் கோரும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாணவர்­க­ளு­டைய மனு நேற்று ஐக்­கியநாடு­கள் சயைின் யாழ்ப்­பா­ணக் காரி­யா­ல­யத்­தில் கைய­ளிக்­கப்­பட்­டது. தமது இந்­தக் கோரிக்­கையை வலி­யு­றுத்தி யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை வரைக்­கும் 4 நாள்­க­ளாக நடை­ப­ய­ணம் மேற்­கொண்­ட­னர். அதன் தொடர்ச்­சி­யாக அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை விட­யத்­தில் ஐ.நா. ஆக்­க­பூர்­வ­மா­கச் செயற்­ப­ட­வேண்­டும், தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டும் என்று இலங்கை அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­க­வேண்­டும் என்று கோரும் மனு நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது.

மாண­வர் ஒன்­றி­யத் தலை­வர் கி.கிருஸ்­ண­மீ­ன­னும் நடை­ப­ய­ணப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மாண­வர்­க­ளும் ஐ.நாவின் யாழ். அலு­வ­ல­கத்­திற்கு நேர­டி­யா­கச் சென்று மனு­வைக் கைய­ளித்­த­னர். அர­சி­யல் கைதி­க­ளைா­கச் சிறை­யில் இருக்­கும் தம்­மைக் குறு­கிய மறு­வாழ்வு அளித்­தா­வது விடு­விக்­கு­மாறு கோரி அனு­ரா­த­பு­ரம், மக­சீன் சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் அண்­மை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

அவர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து தமி­ழர் தாய­கத்­தில் ஆங்­காங்கே ஆர்ப்­பாட்­டங்­க­ளும், பேர­ணி­க­ளும் இடம்­பெற்­றி­ருந்­தன. மாண­வர்­கள் அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை வரை நடை­ப­ய­ணம் மேற்­கொண்­டார்­கள். அவர்­க­ளது பய­ணம் முடி­வ­டைந்த சனிக்­கி­ழமை அலு­வ­லக நாள் இல்லை என்­ப­தால் அனு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்­தில் மாண­வர்­க­ளால் தமது மனு­வைக் கைய­ளிக்க முடி­ய­வில்லை. இதை­ய­டுத்தே நல்­லூர் கோயில் வீதி­யில் உள்ள அலு­வ­ல­கத்­தில் அந்த மனு நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply