சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் : 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகேயுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நேற்று சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகனில் இருந்து வெளியாகும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply