ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடவுள்ள : பிரதமர்
ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் விக்ரமசிங்க இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுத்துறையான ‘ரோ’ சதி செய்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மேற்கோள் கட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டதை அடுத்து பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமரின் இந்திய விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு உயரதிகாரிகளை சந்திக்க முன்னேற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply