அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய
உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பலமுறை ஊடகங்களில் தெரியப்படுத்தினேன். ஆனாலும் ஊடகங்கள் இவைகளில் கவனம் செலுத்தவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் சிங்கள இனம் அழிவடைவதனை பாதுகாக்கும் பொருட்டு, மகாநாயக்க தேரர்களே அதிக கவனம் செலுத்த வேண்டுமென கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply