பாகிஸ்தான் – பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாப பலி

பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகள் திடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் பலியானது குறித்து அறிந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி ஆரிப் அல்வி ஆகியோர் பலியானோர் குடும்பத்துக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply