குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் : நாலக டி சில்வா

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு முறைகள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது முறையாகவும் இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு எதிரான கொலைச் சதித் திட்டம்: இன்றும் நாலக டி சில்வாவிடம் விசாரணை

கொலைச் சதித் திட்டம் தீட்டிய விவகாரம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இதன்படி இன்று காலை 9.15 மணியளவில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு  அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் உரையாடியமை தொடர்பாகவே அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் நாலக டி சில்வாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply