ரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற லாரி : அமைந்தகரையில் பரபரப்பு
மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. சோதனையில் கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது.
அதை உடனே சரிசெய்ய முடியாததால் கன்டெய்னர் லாரி சாலையின் நடுவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பணத்துடன் நின்று கொண்டிருந்தது.
தகவலறிந்த பொதுமக்கள் அங்கு ஆர்வமுடன் திரண்டனர். பொதுமக்கள் கூடுவதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும், லாரி பாதுகாப்பாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணம் இருந்த கன்டெய்னரை யாரும் நெருங்காமல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் மீட்பு வேன் அங்கு வரவைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரி ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒருமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply