முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது
ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றும் சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்டவரை இன்று இரவே கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply