நாடாளுமன்றில் நாளை பிரதமர் மஹிந்த விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளார்!

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுக்கவுள்ளார்.மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்டு அதற்க்கு 122 பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என புதிய அரசாங்க தரப்பினர் கூறிவருகின்ற நிலையில், பிரேரணையின் பிரதியை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளையத்தினம் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply