பிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நாளை மீண்டும் வாக்கெடுப்பு? : ஜனாதிபதியிடம் கோரிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாளை மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நாடாளுமன்றம் பிற்பகல் 1.30 மணிக்கு கூடும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாளை மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இந்த சந்திப்பின் போது 2 அல்லது 3 நாட்களில் நாட்டின் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply