பாராளுமன்றம் 19ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று 1:30 மணியளவில் சபை அமர்வுகள் ஆரம்பமாகவிருந்த நிலையில், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தைச் சுற்றிவளைத்து பெரும் பதற்ற நிலைமையொன்றினை தோற்றுவித்தனர்.

இதன்போது நேற்றைய தினம் கத்தியுடன் சபைக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெருமாவை கைது செய்யுமாறு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சபைக்கு வந்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தனது ஆசனத்தில் அமராமல் சபையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். என்றாலும் நிலைமை தொடர்ந்து மோசமானதால் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply