சபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் சர்வதேசத்திடம் முறையிட தயாராகும் அரசாங்கம்
சபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரிடமும், சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடமும் முறைப்பாடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிலையியல் கட்டளைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக அவர் செயற்படுகின்றார்.
எனவே, சபாநாயகரின் பக்கச்சார்பான, சட்டவிரோத நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளின் தூதரக காரியாலயங்களுக்கும் விளக்கமளிக்கவுள்ளோம்.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் இதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன“ என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply