உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு விசேட அழைப்பு

இலங்கை பொலிஸ் சேவையிலுள்ள சகல சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஆகியோருக்கு நாளை  காலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் விசேட கூட்டம் ஒன்றுக்காகவே இவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கான அழைப்பு பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவிப்பின் பேரில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply