ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை: ஜே.வி.பி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் ஆளுந்தரப்பு சார்பாக கலந்துகொண்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

எனினும், அதற்கு தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனற்று போனதாக குறிப்பிட்ட அநுரகுமார, இனியும் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லையென குறிப்பிட்டார்.

அத்தோடு, நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி ஜனாதிபதி செயற்படுகின்றார் என்ற விஜயம் தெரிந்தும், தொடர்ந்தும் தவறிழைக்கப்படுகின்றதென அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தனது வரையறைகள் குறித்து அறிந்து செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், முற்றுமுழுதாக முன்னெடுக்கப்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சிக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்காதென்றும், பேச்சுவார்த்தைக்குச் செல்ல மாட்டோம் என்றும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply