கனடா நாட்டில் கர்ப்பிணி பெண் : மகளை கடித்து கொன்ற கரடி

கனடா நாட்டில் மயோ என்ற இடத்தை சேர்ந்தவர் ரோசட். இவரது மனைவி வலேரியா (வயது 37).இவர்களுக்கு அடேல் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. வலேரியா பள்ளி ஆசிரியை ஆவார். அவர் மீண்டும் கர்ப்பம் ஆகி இருந்தார். எனவே, பிரசவத்துக்காக விடுமுறை எடுத்து இருந்தார். அவர்கள் அங்குள்ள மலை பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர்.

இந்த பகுதியில் கிரேசிலி இன கரடிகள் வாழ்கின்றன. வலேரியா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கரடி ஒன்று பாய்ந்து வந்து அவர்களை தாக்கியது. தாய்- மகள் இருவரையும் கடித்து குதறியது.

அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு கணவர் ரோசட் துப்பாக்கியுடன் ஓடி வந்தார். கரடியை நோக்கி அவர் சுட்டார். இதில் கரடி இறந்து விட்டது.

அதே நேரத்தில் கரடி கடித்து குதறியதில் தாய்- மகள் இருவருமே உயிர் இழந்து விட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply