நீதியான ஆட்சி தொடர்பில் மைத்திரி-மஹிந்தவுக்கு பாடம் கற்பிப்போம்: தலதா அத்துகோரள
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றி, நீதியான முறையில் எவ்வாறு ஆட்சி நடத்துவது என்பது தொடர்பில் கற்பிப்போமென நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராமாமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“ஜனாதிபதியாக மீண்டும் வருவதற்கு ஆசைப்படும் மைத்திரியின் கனவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தன்மீதுள்ள குற்றங்களிலிருந்து தப்பிக்க முனையும் எதிர்ப்பார்ப்புக்களை தோல்வியடைய செய்ய வேண்டும்.
மேலும் ஜனாதிபதி நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டு ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியிலிருந்து நீக்கி பெரும் துரோகத்தினை இழைத்துவிட்டார்.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கூறிய மைத்திரி, அப்பதவி ஆசைக்காக சிந்திக்காமல் செயற்படுகின்றார். இதனால் மக்களும் அரசின் மீது நம்பிக்கையற்றவர்களாக மாறிவிட்டார்கள்.
ஆகையால் நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக மக்கள் நிச்சயம் தெரிவுசெய்வார்கள்.
அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பொறுப்புக்களையும் அவரிடம் வழங்குவதற்கு தற்போது தீர்மானித்துள்ளோம்” என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply