அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை இன்று சந்திக்கவுள்ளது கூட்டமைப்பு
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ள இந்த சந்திப்பு, இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இந்த கலந்துரையாடலில் உரையாடப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னனியினருக்கு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு வழங்க வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply