கூரிய ஆயுதத்தால் தாக்கி அண்ணனை கொலை செய்த தம்பி

ஊருபொக்க, ஹீகொட பகுதியில் கூரிய ஆயுததத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று (09) காலை 7.30 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட காணிப் பிரச்சிணை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
75 வயதுடைய மூத்த சகோதரனே இவ்வாறு தம்பியின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊருபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply