அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? – ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான உயர்நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்துள்ளதோடு, தீர்ப்பு வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்படவில்லை.
தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதோடு, தீர்ப்பு எவ்வாறாக அமைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் முன்னெடுக்கவேண்டிய விடயங்கள், எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply