லண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம் : மர்மகும்பல் அட்டூழியம்

ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸ். இவரது கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினார். அங்கு தங்கியிருந்த அவர் 1885-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி தனது 64-வது வயதில் மரணம் அடந்தார்.
அவரது கல்லறை வடக்கு லண்டனில் உள்ளது. அங்கு அது நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த கல்லறையை யாரோ மர்ம கும்பல் இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 1880-ம் ஆண்டுகளில் இக்கல்லறை சேதப்படுத்தப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply