மீட்டியகொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மீட்டியாகொட, உடுமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை 04 மணியளவில் உடுமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.இதில் படுகாயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலை ஊடாகவே இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மீட்டியாகொட பொலிஸார் நடத்திய விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் குழுவொன்று மதுபானம் அருந்திக் கொண்டு இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply