அடிப்படைவாதத்துக்கு எதிராக 24 அம்ச பிரகடனம் : சபாநாயகர் அறிவிப்பு

நாட்டில் நிலையான பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான 24 அம்சங்கள் அடங்கிய விசேட பிரகடமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய முன்வைத்துள்ளார். நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற அனைத்து மத மற்றும் சர்வ கட்சி மாநாட்டில் இந்தப் பிரகடனம் சபாநாயகரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரகடனம் மிக விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
மத வைராக்கியம், அடிப்படைவாதம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு சிபாரிசுகளுடன் கடைபிடிக்க வேண்டிய 24 விடயங்கள் இந்தப் பிரகடனத்தில் காணப்படுவதாகவும் சபாநாயகர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply