பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மத்தியில் இன முரண்பாட்டை ஏற்படுத்தச் சிலர் முயற்சி: ஜனாதிபதி மைத்திரிபால

பயங்கரவாத சம்பவங்கள் ஒருபுறமிருக்கச் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்தச் சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அதிகாரிகளின் ஒத்துழைப்பு என்பன தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்திப்புக்களின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளதாகவும், எனவே மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply