அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 சீக்கிய வாலிபர்கள் பலி

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் மாநிலத்தில் உள்ள புறநகர் பகுதியான பிஷர்ஸ் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வருண் தீப், தாவீத் சாஹல், சாந்து. இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ரேஸ் காரில் வேகமாக வந்துள்ளனர். மேலும் சீட் பெல்ட் அணியாமல் சாலை விதிகளை மீறி சென்றுள்ளனர். 

அதிவேகமாக வந்த அந்த கார், சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் வருண் தீப் (19),  தாவீத் சாஹல் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சாந்து(20) படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த சாந்துவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply