எனக்கு பிரபல அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளது: மதூஸ் வாக்கு மூலம்

பிரபல அரசியல்வாதிகள் பலர் தன்னிடம் பெரிய உதவிகள் பெற்றிருப்பதாகவும், தற்பொழுது அவர்கள் என்னை மறந்துள்ளதாகவும் பாதாள உலக தலைவர் மாகந்துரே மதூஸ் பொலிஸாரிடம் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகளுக்கு நேரடியாக நிதியாக உதவி செய்ததாகவும், சிலருக்கு மறைமுகமாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகந்துரே மதூஸ் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் பலர் பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதாகவும், மேலும் முக்கிய தகவல்கள் பல அவரிடமிருந்து பெறவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாகந்துரே மதூஸுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கடந்த அரசாங்கத்தின் தெற்கைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள் பலரின் பெயர்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர்களில் சில அரசியல்வாதிகள் டுபாய் நாட்டுக்குச் சென்று மதூஸிடம் உதவிகளை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக இன்றைய சகோதர தேசிய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply