ஞானசார தேரர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

பொலிஸ் அதிகாரியொருவரின் கடமைக்கு இடைஞ்சல் செய்தமை தொடர்பிலான வழக்கில், பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடை உத்தரவை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி காஞ்சனா நெரஞ்ஜலா டி சில்வா இன்று (07) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் செயலமர்வொன்றில் கலந்துகொள்ளச் செல்வதற்காக, தனது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் ஆலேசனையின் படி, அரச ஊழியரின் கடமைக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய சம்பவம் குறித்த குற்றப் பத்திரம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply