மஹிந்த – மைத்திரி தரப்பினரிடையே இன்று 5 ஆவது கட்டப் பேச்சுவார்த்தை

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று (07) நடைபெறுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாயின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இக்கருத்துக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். மீசை பற்றும் போது சுருட்டு பற்ற வைக்க முன்னெடுக்கும் நடவடிக்கையைப் போன்றதே தயாசிறி ஜயசேகரவின் இந்த அறிவிப்பு என ஜி.எல். பீரிஸ் விமர்சித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply