மொராக்கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து 14 பேர் பலி

மொராக்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எர்ராச்சிடியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கின்றது.
இந்நிலையில், இங்குள்ள எல் காங்க் நகரின் அருகே நேற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து வெள்ளப் பெருக்கில் சிக்கி கீழே இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்கப்பட்ட 27 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply