போரா சமூக மாநாட்டின் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நொிசல்

போரா சமூகத்தினரது வருடாந்த ஆசூரா முபாறக் சா்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்த போரா சமூகத்தினர், மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலையில், தற்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நொிசல் ஏற்பட்டுள்ளது.

போரா மாநாட்டிற்காக 40 நாடுகளைச் சோ்ந்த 21 ஆயிரத்திற்கும் அதிகமான போரா சமூகத்தவா்கள், அண்மையில் இலங்கை வருகை தந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிலவும் இடம் மற்றும் வசதிகள் போதியளவு இல்லாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பேச்சாளா் ஒருவா் தொிவித்துள்ளாா்.

இவ்வாறான ஒரு பின்னணியில், இது போன்ற விசேட சந்தா்ப்பங்களின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நொிசலைத் தவிா்க்க முடியாது என்றும் அந்தப் பேச்சாளா் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

பம்பலப்பிட்டியிலுள்ள போரா சமூகத்தின் பிரதான பள்ளிவாசலை மையப்படுத்தி, தொடர்ந்து 10 நாட்களாக இடம்பெற்ற போரா சமூகத்தினரது ஆசூரா முபாறக் சர்வதேச மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply