பிரேசில் – மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி

பிரேசில் நாட்டில் பாதிம் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 90 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று இரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

தகவலறிந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply