பணத்தின் பெறுமதியை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை: பந்துல

பணத்தின் பெறுமதியை பாதுகாப்பது அரசாங்கத்தின் தேசிய கடமையென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் உற்பத்தி மற்றும் வருமானம் என அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் குறைத்துள்ளது.
ஆனால், ஒன்றை மாத்திரம் கூட்டியுள்ளது. அதுதான் பொருட்களின் விலையாகும்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் மக்களிடமிருந்து பெற்ற வரி வருவாய், 2 டிரில்லியன் ரூபாய் மாத்திரமே ஆகும்.
ஆனால் தற்போது மக்களிடம் பொருட்கள் ஊடாக விதிக்கப்படும் வரி 100க்கு 100% வீதமாக மாற்றமடைந்துள்ளது.
இதனால் ஒரு வியாபாரத்தை கூட ஆரம்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் எந்ததொரு அத்தியாவசிய செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் பணத்தின் பெறுமதியை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. அத்துடன் பணம் தொடர்பில் அறிவியல் அறிவு இல்லாதவொருவர் நிதி அமைச்சராக இருக்க முடியாது.
ஆகையால், இவைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி சிறந்த வாழ்க்கையினை நோக்கி செல்ல வேண்டுமானால் பொதுஜன பெரமுனவை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply