ஆந்திராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பற்றி எரிந்த கார் : 5 பேர் உடல் கருகி பலி

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து பெங்களுரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை விஷ்ணு ஓட்டிவந்த நிலையில் அவரது மனைவி, குழந்தைகள் உள்பட மொத்தம் 6 பேர் அதில் பயணித்தனர். கங்காவரம் என்ற பகுதியை கடந்தபோது அதி வேகமாக சென்றதால் காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென பெரும் புகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
இதனால் பதற்றமடைந்த விஷ்ணு காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிச்சென்ற விஷ்ணு அதிலிருந்து வெளியே குதித்து படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் கொளுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்த விஷ்ணுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply