இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகம் சென்ற இராணுவ வீரர்கள்

விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (18) எட்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அணி தெரிவித்துள்ளது.
வேதன பிரச்சினை மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து விசேட தேவையுடைய மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் சிலர் இன்று (18) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வந்திருந்தனர்.
நேற்று (17) பிற்பகல் 6 மணி அளவில் பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி போராட்டக்காரர்கள் சென்ற போது பொலிஸாரால் கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்றிருந்தனர்.
எமக்கு இயன்ற காலத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றிய போதும், தற்போது பொதுமக்கள் எங்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் எமது நிலை உள்ளதாக இராணுவ வீரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply