அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், மிகவும் பரபரப்பான சாலை கொலம்பியா சாலை. வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நேற்று இரவு நடந்து சென்றவர்கள் மீது திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதனால் சாலையில் சென்றவர்கள் சிதறி ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும், ஏராளமான போலீசார் மற்றும் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது தெரு சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply