அமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியில் இறங்கிய மோடி

இந்திய பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், வழியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவரது விமானம் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

அப்போது விமானத்தில் இருந்து இறங்கிய மோடியை, ஜெர்மன் நாட்டின் இந்திய தூதர் முக்தா தோமர், தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் ஆகியோர் வரவேற்றனர். ஜெர்மனியில் 2 மணி நேரத்திற்குப் பிறகு, அவரது விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் புறப்பட்டுச் செல்கிறது.

இன்று முதல் 27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்கிறார். இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply