கோட்டாபயவுக்கு வாக்களிக்க 2 லட்சம் இலங்கையரை வெளிநாட்டிலிருந்து வரவழைக்க திட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக வாக்குரிமை பெற்றுள்ள வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 2 பேரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் நாட்டைக் காப்பாற்றுவோம், கோட்டாவை வெற்றிபெறச் செய்வோம், நவம்பர் 16 தேர்தலுக்கு இலங்கை செல்வோம் எனும் கருப்பொருளின் கீழ் வெளிநாட்டில் நடைபெறும் முதலாவது கூட்டம் பிரான்சின் பரிஸ் நகரில் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த மாநாடு இன்று இடம்பெறவுள்ளதாகவும் இதற்காக வேண்டி பேராசிரியர் சன்ன ஜயசுமன உட்பட குழுவொன்று பரிஸ் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தாயகத்துக்கான பிரான்சிலுள்ள இலங்கையர் அமைப்பு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply