சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதியின்றி நியமனங்கள் வழங்கியமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு சாட்சியம் வழங்குவதற்காகவே அவர் இன்று ஆஜராகியுள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு முறையற்ற விதத்தில் ஆட்களை நியமித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நியமனங்களில் 90 வீதமானவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply