சீனாவில் சோகம் – லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் பலி

சீனா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 70க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். திடீரென டயரில் காற்று இறங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 36 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என சின்சுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதில்லை. அதன் காரணமாகச் சாலை விபத்துகள் பரவலாக ஏற்படுகின்றன. 2015-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் 58 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply